செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (10:43 IST)

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியது இலங்கை அரசு.

இந்தியப் பெருங்கடலை நோக்கி அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், பெல்ட் மற்றும் சாலை திட்டத்தில் சீனா- ஐரோப்பா இடையே பல்வேறு துறைமுகங்களையும், சாலைகளையும் இணைக்க உதவியாய் இருக்கும் என்பதற்காக சீனா 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.7,150 கோடி) கொடுத்து இலங்கையிடம் இருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.
 
ஆனால் இந்த திட்டத்திற்காக சீனாவிற்கு, இலங்கை பெரும் வரிச்சலுகை வழங்கி இருப்பதால், அரசின் இந்த முடிவை அம்மாநில எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடுமையாய் விமர்சித்து வருகின்றனர். இதன்மூலம் நாட்டின் சொத்துகளை சீனாவிற்கு விற்று விட்டதாக இலங்கை எதிர்கட்சிகள் சாடியுள்ளனர்.