செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (15:53 IST)

குஜராத் காங். முதல்வர் வேட்பாளர் பாகிஸ்தான் ஆதரவாளரா? பிரதமரின் அதிரடி குற்றச்சாட்டு

குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் அகமது படேலை முதல்ராக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி குஜராத் முதல்வராக விரும்பும் முதல்வர் வேட்பாளர் அகமது படேல் பாகிஸ்தான் ஆதரவாளர் என்றும், அவர் குஜராத் முதல்வராவதை பாகிஸ்தான் ராணுவம் விரும்புவதாகவும் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் பிரதமரின் இந்த குற்றச்சாட்டை அகமது படேல் மறுத்துள்ளார். தான் என்றும் குஜராத் முதல்வராக விரும்பியதில்லை என்றும் பிரதமரின் இந்த குற்றச்சாட்டு கற்பனையானது என்றும் தெரிவித்துள்ளார்.