ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (13:32 IST)

முதல்வர் உரை புறக்கணிப்பா? இலங்கை அமைச்சர் விளக்கம்

srilnaka malaiyakam 200
தமிழக அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிபரப்பபடாதது பற்றி இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையின் கொழும்பில் மலையகத் தமிழர்களில் நாம் 200 என்ற நிகழ்ச்சிக்கு இலங்கை பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்தார்.

மலையக தமிழர்கள் விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை அமைசர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் வழ்த்துரைக்கான காணொலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற 'நாம் 200 நிகழ்வில்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிப்பரப்பபடாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘’தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிப்பரப்பபடாததற்கு காணொலி தாமதமாகக் கிடைத்ததேர் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.