தென் கொரியா, ஈரான், இத்தாலிக்கு செல்வதை தவிருங்கள்..

Arun Prasath| Last Modified புதன், 26 பிப்ரவரி 2020 (16:54 IST)
தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,700 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதே போல் இத்தாலி நாட்டில் 11 பேரும், ஈரான் நாட்டில் 15 பேரும், தென் கொரியா நாட்டில் 11 பேரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் தென் கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :