1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:37 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து திணறல்!

தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 364 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது என்பது குறிப்பிடதக்கது
 
இதனை அடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்சை அந்த அணி விளையாடி வருகிறது 
 
426 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இன்னும் 414 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்