1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:49 IST)

85 இலக்கை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்த தென்னாப்பிரிக்கா!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 85 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 13.3 அவர்களில் இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஆறு புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் நமீபியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது