வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 ஜூன் 2019 (19:29 IST)

ரோஹித் சதம், கோஹ்லி அரைசதம் … அமீர் அசத்தல் பவுலிங் – பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு

பாகிஸ்தான் அணிக்கு எதிரனப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் சேர்த்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம், இன்று மதியம் இந்திய நேரப்படி 3.00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.

இதில் டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதுதான் வாய்ப்பு எனப் பேட் செய்தது. ரோஹித்தும் ராகுலும் சிறப்பான தொடக்கம் கொடுக்க இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கே எல் ராகுல் 59 ரன்களில் அவுட் ஆக ரோஹித் ஷர்மா அற்புதமாக விளையாடி 140 ரன்களை சேர்த்து அசத்தினார். அடுத்ததாக வந்த பாண்ட்யா 26 ரன்களிலும் தோனி 1 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

இதற்கிடையில் 47 ஆவது ஓவரில்  மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.  ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின் போட்டித் தொடங்கியதும் சிறப்பாக விளையாடிய கோஹ்லி 77 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதைத் தொடர்ந்து வந்த கேதார் ஜாதவ் விஜய் சங்கரோடு ஜோடி சேர்ந்து நிதானமாகவே ரன்களை சேர்த்தனர். இதனால் எங்கோயோ போக வேண்டிய ஸ்கோர்  நங்கூரம் போட்ட கப்பல் போல நின்றது. இதனால் இந்திட அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் மட்டுமே சேர்த்தது.  பாகிஸ்தானின் அமீர் சிறப்பாக பந்துவீசி 10 ஒவர்களில் 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.