ஏழாவது முறையாக பாகிஸ்தானை வென்ற இந்தியா! ரோஹித், குல்தீப் அபாரம்

Last Modified திங்கள், 17 ஜூன் 2019 (05:42 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் ஆறு முறை மோதி ஆறிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று ஏழாவது முறையாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோஹித்தின் அபார சதம், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லியின் அரைசதங்கள் ஆகியவற்றால் 50 ஓவர்களில் 336 ரன்கள் குவித்தது. 337 என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 35 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. மீதமுள்ள 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் பாகிஸ்தானுக்கு 40 ஓவர்களில் 302 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் 40 ஓவர்களில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
140 ரன்கள் எடுத்த ரோஹித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய்சங்கர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். தொடர்ந்து ஏழாவது முறையாக பாகிஸ்தானை வென்ற இந்தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதுஇதில் மேலும் படிக்கவும் :