செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (11:57 IST)

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் ; இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

pv sindhu
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும், இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மிக அபாரமாக விளையாடி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக நேற்று சீன வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து இன்று ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
ஜப்பான் நாட்டின் சயனா கவாகாமி என்பவரை 21-15, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்னும் ஒரே ஒரு போட்டியில் அவர் வெற்றி பெற்றுவிட்டால் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாம்பியன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது