ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:59 IST)

ஹெய்டனை நான் கதறவிட்டிருக்கிறேன்… சோயிப் அக்தர் பெருமிதம்!

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக ஆஸி பேட்ஸ்மேன் மேத்யு ஹெய்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவராக ரமிஸ் ராஜா நியமிக்கப்பட்ட நிலையில் பயிற்சியாளர்களாக வெர்னன் பிளாண்டர் மற்றும் மேத்யு ஹெய்டன் ஆகியோரை நியமித்துள்ளார். இந்நிலையில் ஹெய்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பேசியுள்ளார்.

ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ‘நான் பலமுறை எனது பந்துவீச்சால அவரைக் கதற விட்டிருக்கிறேன். அவரும் அழுதிருக்கிறார். நாங்கள் இருவரும் வார்த்தை மோதல்களிலும் ஈடுபட்டுள்ளோம். ஓய்வுக்குப் பின் சந்தித்துக் கொண்ட போதும் விலகியே இருந்தோம். ஆனால் அதன் பின்னர் இருவரும் நண்பர்களானோம். அவர் பாகிஸ்தான் அணிக்கு கோச் ஆக வந்திருப்பது நல்லது. ‘ எனப் பேசியுள்ளார்.