வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:37 IST)

ஸ்கூல் பசங்க டீம அனுப்பினா இப்படிதான் இருக்கும் – பாகிஸ்தான் அணியை வெளுத்து வாங்கும் சோயிப் அக்தர்!

பாகிஸ்தான் அணி நியுசிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் மிக மோசமாக விளையாண்டு வரும் நிலையில் சோயிப் அக்தர் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் நியுசிலாந்துக்கு சென்று தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டை ஏற்கனவே 101 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது பாகிஸ்தான். தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 297 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். 364 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் 238 ரன்கள் விளாசி ஃபாஹிம் அஷ்ரப் பந்தில் ஆட்டமிழந்தார். இது அவரின் 4 ஆவது இரட்டைச் சதமாகும்.

இதனால் நியுசிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பேசியுள்ள முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சராசரியான வீரர்களைக் கொண்டுள்ளது. அதனால் சராசரியான போட்டிகளையே விளையாட முடியும்.  இது போன்ற அணியை பள்ளிக்கூடங்களில் விளையாடும் கிரிக்கெட்டைத்தான் விளையாட முடியும். பாகிஸ்தான் அணி எப்போதெல்லாம் டெஸ்ட் போட்டி விளையாடுகிறதோ அப்போதெல்லாம் அதன் சாயம் வெளுத்துவிடுகிறது.