முக்கிய நபர்களின் செல்போன்கள் வேவு பார்ப்பா? மத்திய அரசு சொல்வது என்ன??
இந்தியாவில் முக்கிய நபர்கள் 300-க்கும் அதிகமானோரின் செல்போன்கள் சாஃப்ட்வேர் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆம், இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் வேவு பார்ப்பதற்கு 50,000-த்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துள்ளது. இதில் பெரும்பாலான எண்கள் இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்சிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொரோக்கோ, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவையாம்.
இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் உள்ளன. இதில் 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரது எண்களும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.