1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (16:40 IST)

2 ரன்னில் சதத்தை மிஸ் செய்த தவான்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட தவான் இந்தியா அணியில் இருந்து தூக்கப்படும் நிலையில் இருந்தார். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து தூக்கப்பட்டு விட்டார். இந்நிலையில் இன்று தொடங்கிய ஒருநாள் போட்டியில் அவர் இறக்கப்பட்டார். ஒருவேளை அவர் சிறப்பாக விளையாடாவிட்டால் இந்த தொடருக்குப் பின் அவர் நீக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் சிறப்பாக விளையாடி தன்னால் இன்னும் சில ஆண்டுகள் அணிக்காக விளையாட முடியும் என நிரூபித்துள்ளார்.

ஆனால் அவரது இருப்பைப் பூர்த்தி செய்வது போல சதம் அடிப்பார் என எதிர்பார்கப்பட்ட நிலையில் 98 ரன்களில் அவ்ட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.