செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (08:40 IST)

பூம்ரா எல்லாம் சும்மா… எங்க பவுலர்தான் சூப்பர் – ஒரண்டையை இழுக்கும் பாகிஸ்தான் வீரர்!

உலகின் தலை சிறந்த பவுலராக விளங்கும் பூம்ராவை விட பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடிதான் சிறந்த பவுலர் என அயூப் ஜாவித் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜாஸ்பிரித் பூம்ரா உலகளவில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தற்போது இருக்கிறார். டெஸ்ட் மற்றும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகள் என அனைத்திலும் கலக்கி வரும் அவரை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர்யும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீர்ர அயுப் ஜாவித் தங்கள் நாட்டின் ஷாகின் அப்ரிடி பூம்ராவை விட சிறந்தவர் எனக் கூறியுள்ளார்.

அதில் ‘அப்ரிடியிடம் பூம்ராவைவிட சிறந்த டெக்னிக்கள் உள்ளன. பும்ரா ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் மட்டும் தான். அவரால் புதிய பந்துகளில், நேர்த்தியான பந்துகளை வீச முடியாது. ஆனால் அப்ரிடியால் எல்லா விதமான போட்டிகளிலும் வேரியேஷன் காட்ட முடியும்.’ எனக் கூறியுள்ளார்.