திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 செப்டம்பர் 2018 (12:54 IST)

இந்திய அணியை கடுமையாக சாடிய சேவாக்

இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-4 என்ற வித்தியாசத்தில் தொடரை இழந்தது குறித்து முன்னால் தொடக்க ஆட்டக் காரரான சேவாக் தன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்களில் கேப்டன் விராட் கோலி மட்டும் தான் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் தங்கள் திறமையைக் காட்ட தவறிவிட்டனர். குறிப்பாக ஷிகர் தவான் 162 ரன்களும் ,கே.எல் ராகுல் 299, ரன்களும்,ரகானே 2 அறை சதத்துடன் 257 ரன்களும் புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.மேலும் இவர்கள் தம் பொறுப்பான ஆட்டத்தை  நிதானமான முறையில் வெளிப்படுத்தவில்லை அதுவே தோல்விக்கான காரணம் என்று முன்னாள் இந்திய அணி வீரரான சேவாக் கூறியுள்ளார்.


சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் “டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு முதலில் என் வாழ்த்துக்கள் என்றும் இந்திய அணி வெளிநாட்டுத் தொடரின் போது
தம் முழு திறமையைக் காட்டி கூடுதலாக உழைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.