ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (11:27 IST)

பேபி சிட்டரானார் சேவாக் – குழந்தைகளுடன் கியூட் வீடியோ !

விரைவில் நடக்க இருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடரை விளம்பரப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய விளம்பரத்தில் சேவாக் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரேலியாத் தொடரில் பரபரப்பாகப் பேசப்பட்ட வார்த்தை பேபிசிட்டர். இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பேட் செய்த ரிஷப் பண்ட்டை சீண்டும் விதமாக ஆஸியின் கேப்டன் டிம் பெய்ன் ‘நான் எனது மனைவியோடு சினிமாவுக்கு செல்ல வேண்டும். அதனால் எனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பேபிசிட்டராக வருகிறாயா ?’ எனக் கேட்டார். இது ஸ்டம்ப் மைக்கில் கேட்டு சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்த விஸ்வரூபம் எடுக்கவே அதை சமாளிக்கும் விதமாக ரிஷப் பண்ட் டிம் பெய்னின் குடும்பத்தை சந்தித்து சமாதானமாகினார். டிம் பெய்னின் மனைவி ரிஷப் பண்ட் தனது குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றி ’ரிஷப் பண்ட் ஒரு நல்ல பேபி சிட்டர்’ என்று புகழ்ந்திருந்தார். இதனையடுத்து அந்தப் பிரச்சனை அப்போது ஓய்ந்தது.

அதையடுத்து இரண்டு மாத இடைவெளியில் இப்போது மீண்டும் இந்தியா வந்து ஆஸி அணி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அந்தத் தொடரை விளம்பரப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள விளம்பரப்படத்தில் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேவாக் நடித்துள்ளார். இந்த விளம்பரப் படத்தை சுவாரசியாக மாற்ற ரிஷப் பண்ட் மற்றும் டிம் பெய்ன் இடையிலான சர்ச்சைப் பேச்சான பேபிசிட்டர் விஷயத்தை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியக் குழந்தைகள் நடித்திருக்கும் இந்த விளம்பரத்தில் சேவாக் ஒரு பேபி சிட்டராக நடித்திருக்கிறார். அழகான குழந்தைகளோடு சேவாக் நடித்திருக்கும் கியூட்டான இந்த விளம்பரம் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.