1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: சனி, 7 ஜனவரி 2023 (23:00 IST)

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு !

samjitha sanu
இந்தியாவைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் காமன் வெல்த் போட்டிகள் நடந்தது.

அப்போது, சஞ்சிதா சானுவின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் வெளியானதை அடுத்து, சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி அவரை சஸ்பெண் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், தேசிய  ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் முன் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், குற்றம் நிரூபனமானால் அவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்; வெள்ளிப்பதக்கமும் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.