வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:29 IST)

இது முடிவல்ல.. புதிய கனவுகளுக்கான தொடக்கம்: ஓய்வு பெற்ற சானியா மிர்சாவின் உருக்கமான அறிக்கை

Sania
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் தற்போது ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 
 
அதில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆறு வயதில் டென்னிஸ் கொடுக்க கற்றுக் கொடுக்குமாறு எனது பயிற்சியாளரிடம் சண்டை போட்டேன் என்றும் எனது கனவு காண போராட்டம் 6 வயதிலேயே தொடங்கியது என்றும் தெரிவித்துள்ளார். 
 
எத்தனை தடைகள் வந்த போதும் ஒரு நாள் இந்தியாவுக்காக கிராஸ்லாம் விளையாடுவேன் என நம்பினேன் என்றும் அதேபோல் 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
20 ஆண்டுகளில் நான் பெற்ற வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் இது முடிவல்ல புதிய நினைவுகள், கனவுகளுக்கான தொடக்கம் என்றும் இனி எனது மகன் உடன் அதிக நேரம் செலவிட போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva