1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (18:22 IST)

தூங்கி கொண்டிருந்த தோனியிடம் ரொமான்ஸ் செய்த சாக்‌ஷி

dhoni sakshi
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை இந்த விடுமுறையை பிரபலங்கள் பலர் பலவிதமாக கழித்து வரும் நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனி பெரும்பாலும் தூங்கியே கழிப்பதாக தெரிகிறது
 
இந்த குறித்து தோனியின் மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி தூங்கி கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருடைய கால் விரல்களை கடிப்பது போல்  ஒரு ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் ’நீங்கள் கவனத்தை ஈர்க்கும் நேரம் இதுதான்’ என்றும் சாக்சி குறிப்பிட்டுள்ளதும் இந்த புகைப்படம் தற்போது தல ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா விடுமுறை முடிந்து மீண்டும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி கோப்பையை பெற்று தரவேண்டும் என்பதே அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ரசிகர்களின் விருப்பத்தை தல தோனி விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது