செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (10:45 IST)

திமுக பேனரால் வந்த வம்பு: கடைசி நேரத்தில் நின்றுபோன திருமணம்

ஆரணியில் பேனர் வைப்பது சம்மந்தமாக நடைபெற்ற தகராறில் கடைசி நேரத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
ஆரணியை சேர்ந்த திமுக பிரமுகரான ராஜகோபால என்பவரது மகள் சந்தியாவிற்கும் அதிமுகவை சார்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கட்சியை தாண்டி இரு வீட்டாரும் நட்புடன் பழகி வந்தார்கள். கல்யாண வேலை தடபுடலாக நடைபெற்றது. 
 
நேற்று காலை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், பெண் வீட்டார் வம்படியாய் மண்டபத்திற்கு அருகே திமுக பேனரை வைத்தனர். இதனால் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
கடைசியில் திருமணம் நிறுத்தப்பட்டது. அந்த பெண்ணிற்கு அருகில் இருக்கும் கோவிலில் வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஒரே ஒரு பேனரால் திருமணம் தடைபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.