உலகக்கோப்பையைத் தொடங்கிவைக்கும் சச்சின் – எப்படித் தெரியுமா ?

Last Modified வியாழன், 30 மே 2019 (11:25 IST)
இன்று தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடரை சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராகத் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இங்கிலாந்தில் இன்று உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதில் இந்தியா உள்பட மொத்தம் பத்து நாடுகளின் அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் நடைபெறவுள்ளன. 

இன்று நடைபெறும் முதல் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டது. இன்றைய போட்டியில் கிர்க்கெட்டின் கடவுள் என கூறப்படும் சச்சின் ஒரு வர்ணனையாளராக தொடங்கி வைக்க இருக்கிறார். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா சார்பால கங்குலி, ஹர்ஷே போக்லே மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோரை வர்ணனையாளராக ஐசிசி அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :