செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 25 மே 2022 (15:42 IST)

மும்பை அணியில் மகனுக்கு வாய்ப்பில்லை: மனம் திறந்த தெண்டுல்கர்

Arjun
மும்பை அணியில் தனது மகனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படாதது குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .
 
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் ஏலம் எடுக்கப்பட்டு இருந்தார். அவர் ஒரு சில போட்டிகளிலாவது களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை மும்பை அணி பயன்படுத்தவே இல்லை. இதனால் சச்சின் டெண்டுல்கர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்பட்டது .
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தேர்வில் நான் என்னை ஒருபோதும் ஈடுபடுத்தியது இல்லை. இந்த விஷயத்தை அணி நிர்வாகத்திடமே நான் விட்டுவிட்டேன். எனக்கு அணி தேர்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். அவரது இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.