50 ஓவரையும் சரிபாதியா பிரிச்சிடலாம்! – சச்சினின் பலே யோசனை!

sachin
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 5 நவம்பர் 2019 (13:48 IST)
50 ஓவர் போட்டிகளை காண ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து வரும் சூழலில் அதை தவிர்க்க புதிய ஐடியாவை சொல்லியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

20 ஓவர் போட்டிகள் தொடங்கியது முதல் 50 ஓவர் போட்டிகளுக்கான மவுசு குறைய தொடங்கியுள்ளது. சில மணி நேரங்களில் முடியும் 20 ஓவர் போட்டிகளை பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் நாள் கணக்கில் நடக்கும் 50 ஓவர் போட்டிகளை பார்க்க விரும்புவதில்லை.

இதனால் 50 ஓவர் போட்டிகளுக்கு டிஆர்பி குறைவதோடு விளம்பர நிறுவனங்களின் ஆதரவும் குறைந்து வருகிறது. இதை தவிர்க்க முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய யோசனை ஒன்றை முன் வைத்துள்ளார்.

50 ஓவர் கொண்ட போட்டிகளை சரிபாதியாக பிரித்து இரண்டு இன்னிங்க்ஸாக நடத்தலாம். 25 ஓவர் என்பதால் முதல் அணி எளிதில் ஆட்டத்தை முடித்து இரண்டாவது அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரே அடியாக பேட்டிங் அல்லது ஃபீல்டிங் என்று இல்லாமல் இருப்பது கிரிக்கெட் வீரர்களையும் புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்கும் என தெரிவித்துள்ளார்.

சச்சினின் இந்த பரிந்துரையை பிசிசிஐ தலைவரும், சச்சினின் நண்பருமான சவுரவ் கங்குலி ஏற்றுக்கொள்வாரா அல்லது பரிசீலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இதில் மேலும் படிக்கவும் :