1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (11:24 IST)

450 மில்லியன் இதயங்களைக் கவர்ந்த கால்பந்துவீரர் ரொனால்டோ… இன்ஸ்டாகிராமில் படைத்த சாதனை!

கிறிஸ்டியானோ ரொனால்டொ இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார்.

450 மில்லியன் பேர் அவரை பாலோ செய்கின்றனர். இது உலகில் வேறு எந்த நபருக்கும் இல்லாத பாலோயர்ஸ் எண்ணிக்கையாகும்.