இரண்டு வருடத்துக்கு முன்பே என்னிடம் சொன்னார்கள் – மனம் திறந்த ரோஹித் ஷர்மா !

Last Modified ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (19:03 IST)
இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக இறங்க வேண்டி வரும் என அறிவுறுத்தப்பட்டேன் என ரோஹித்ச் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார்.

தனது ஆட்டம் குறித்துப் பேசிய அவர் ‘எனக்கு வாய்ப்பளித்த அளித்த அனைவருக்கும் நன்றி. நான் டெஸ்ட்களில் ஆடாத போதும் கூட வலைப்பயிற்சியில் புதிய பந்துகளைத்தான் எதிர்கொண்டு ஆடினேன். எந்த வண்ணப் பந்தானாலும் ஆரம்பத்தில் எச்சரிக்கையாக ஆடவேண்டும். கொஞ்சம் எச்சரிக்கை கொஞ்சம் ஆக்ரோஷம் இதுதான் என் அணுகுமுறை. ‘ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :