வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (21:34 IST)

75 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று நிறைவு பெறுகிறது. இந்த போட்டியில் 395 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி 73 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்துவிட்டதால் அந்த அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 502 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களும் இந்திய அணி எடுத்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் டிக்ளேர் செய்தது.
 
இதனையடுத்து முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்கள் எடுத்ததால் அந்த அணி வெற்றி பெற 395 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 11 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த தென்னாப்பிரிக்கா அணி இன்று காலை மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. சற்றுமுன் வரை அந்த அணி 28.4 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்களை இழந்துவிட்டது
 
தற்போது முத்துசுவாமி மற்றும் பியடெட் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்துவிட்டால் இந்திய அணி அபார வெற்றி பெற்றுவிடும்
 
இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும், ஷமி 3 விக்கெட்டுக்களையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது