சாதனையை தவற விட்ட கோஹ்லி; சாதனைப் படைத்த ரோஹித்-தவான்

Last Modified திங்கள், 29 அக்டோபர் 2018 (15:40 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்து வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா-தவான் ஜோடி சாதனைப் படைத்துள்ளது.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் ஷர்மா- தவான் ஜோடி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த ஜோடி இன்று ஐந்து ரன்களைக் கடந்த போது தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின்,ஷேவாக் மற்றும் ஆம்லா மற்றும் டீகாக் ஜோடி சேர்த்த 3919 ரன்களை முந்தி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடிக்கு முன்னால் வெஸ் இண்டீஸின் கிரீனிட்ஜ், ஹேய்ன்ஸ் ஜோடி (3986), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்,ஹெய்டன் ஜோடி (5372) மற்றும் இந்தியாவின் சச்சின், கங்குல் ஜோடி (6609) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இந்த போட்டியில் தொடர்ந்து நான்காவது முறையாக சதமடித்து சங்ககராவின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 16 ரன்களில் அவுட் ஆகி அந்த சாதனையைத் தவறவிட்டார்.

தற்போதைய் நிலவரப்படி இந்தியா 28 ஓவர்களில் 160 ரன்கள் குவித்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் ஷர்மா 79 ரன்களுடனும் அம்பாத்தி ராயுடு 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :