1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:03 IST)

ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் - ரோகித் பெருமிதம்!!

ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என ரோகித் சர்மா பெருமிதம் கொண்டுள்ளார்.

 
நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச தீர்மானம் செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே அபாரமாக விளையாடினர். 
 
ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட்டான போதிலும் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் விளாசினார். இந்நிலையில் ராகுலின் சதம் குறித்து ரோகித் சர்மா பெருமிதம் கொண்டுள்ளார். இது குறித்து ரோகித், ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் இதுவாகத்தான் இருக்கும். முதல் பந்தில் இருந்தே தன் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். நேற்றைய ஆட்டநேரம் முடியும் வரை ராகுலின் கவனம் சிதறவில்லை. 
 
ராகுலுக்கு இந்த நாள் அவருக்கானதாக அமைந்துவிட்டது. ராகுலின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. நான் தொடக்கத்தில் இருந்து நல்ல முறையில் ரன்களை சேர்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் சதமடிக்காமால் ஆட்டமிழந்தது மிகவும் வருத்தத்தை அளித்தது என தெரிவித்துள்ளார்.