திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

கே.எல்.ராகுல் அசத்தல் சதம்: வலுவான ஸ்கோர் எடுத்த இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வலுவான ஸ்கோர் எடுத்துள்ளது
 
நேற்று தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச தீர்மானம் செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே அபாரமாக விளையாடினார்
 
ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட்டான போதிலும் கேஎல் ராகுல் சதம் அடித்து இன்னும் களத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 12 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு துணையாக கேப்டன் விராட் கோலி 42 ரன்கள் எடுத்துள்ளார் 
 
இந்த நிலையில் நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது திடீரென மழை வந்து வெற்றியை பறித்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்