ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டிய ஆட்டத்தை கூடுதலாக நேரம் எடுத்து கொண்டார். இதனை அடுத்து போட்டி முடிந்ததும் ஸ்லோ-ஓவர் ரேட் காரணமாக 12 லட்ச ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஐபிஎல் சீசனில் முதன் முதலில் அபராதம் செலுத்தும் கேப்டன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.