1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Rohit sharma out in the first over

முதல் ஓவரில் ரோகித் சர்மா அவுட்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில்  டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து இந்தியா தற்போது பேட்டிங் செய்து வரும் நிலையில் முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல் ஓவரின் முதல் பந்தில் நான்கு ரன்கள் அடித்த ரோகித் சர்மா இரண்டாவது பந்தில்ல் போல்ட் ஆகி அவுட் ஆகி விட்டார்.

இந்த நிலையில் தற்போது சுப்மன் கில் மற்றும் விராட் கோலி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் முதல் இடத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இலங்கை இன்றைய போட்டியில் வென்றால் மட்டும் தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஹர்திக் பாண்ட்யா அணிக்குள் வந்தால் வெளியேறப்போவது இவரா?