1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (12:05 IST)

ரோஹித் சர்மா, சுப்மன் கில் அடுத்தடுத்து சதம்.. இந்தியாவின் ஸ்கோர் விபரங்கள்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஐந்தாவது கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் முன்னணியில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதை பார்த்தோம். 
 
அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து சதம் அடித்துள்ளனர்
 
இதனை அடுத்து தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று விட்ட நிலையில் இந்த போட்டியிலும் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran