வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (23:37 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு முதல் வெற்றி, தென்னாப்பிரிக்காவுக்கு ஹாட்ரிக் தோல்வி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணி மூன்றாவது தோல்வியை தழுவியுள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது. 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
ஸ்கோர் விபரம்:
 
தென்னாப்பிரிக்கா:227/9  50 ஓவர்கள்
 
மோரீஸ்: 42
டூபிளஸ்சிஸ்: 38
மில்லர்: 31
ரபடா: 31
 
இந்திய அணி: 240/4  47.3 ஓவர்கள்
 
ரோஹித் சர்மா: 122
தோனி: 34
கே.எல்.ராகுல்: 26
விராத் கோஹ்லி: 18
 
ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா