1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:28 IST)

28 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட்: இந்தியா 2வது இன்னின்ங்ஸ் ஸ்கோர்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெங்களூரில் நடைபெற்றுவரும் இந்திய-இலங்கை போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது 
 
இந்த நிலையில் இந்தியா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் சற்று முன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிட தக்கது 
 
ரிஷப் பண்ட் அதிரடியாக 28 பந்துகளில் அரைசதம் அடித்தார் தற்போது இந்திய அணி 339 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது