திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2017 (12:57 IST)

ரெய்னாவிடம் தோனி ஏன் கோபப்பட்டார்? உண்மை காரணம் இதோ...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அனைவராலும் ‘கூல் கேப்டன்‘ என்று அழைப்படுகிறார். சில நாட்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா இதுகுறித்து தனது கருத்தை கூறியிருந்தார். 
 
தோனி கேமராவுக்கு முன் எதையும் காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் அவர் எங்களை நன்றாகவே திட்டுவார். அவருக்கு கோபம் வரும். அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று அவருக்கு தெரியும் என ரெய்னா தெரிவித்திருந்தார். 
 
இதற்கு தோனியும் பின்வருமாறு பதில் அளித்தார், என்னால் எப்போதும் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும். யாராவது தவறு செய்தால் கோபம் வரத்தான் செய்யும். நான் எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டேன். டிரஸ்ஸிங் ரூமில் என்னைப்போல ஒரு கமெடியான நபரை பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது, ரெய்னா ஏன் திடீரென கேப்டன் கூல் தோனிக்கு கோபபம் வரும் என கூறினார், அதற்கு தோனி ஏன் விளக்கமளித்துள்ளார் என்பதற்கான உணைமை காரணம் வெளியாகியுள்ளது. 
 
தோனி தலைமையிலான இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலை, ரெய்னா கிண்டல் செய்து சிலெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அக்மல், தோனியிடம் முறையிட்டு இருக்கிறார்.
 
இதனால் ரெய்னாவை தோனி கோபமாய் எச்சரித்துள்ளார். இதனைதான் சமீபத்தில் ரெய்னா தெரிவித்து இருக்கிறார். தோனியும் ரெய்னாவிற்கு விளக்கமளித்துள்ளார் என தெரியவந்துள்ளது.