வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (10:59 IST)

நடராஜனை நாங்க உலகக்கோப்பையில் ரொம்பவே மிஸ் பண்ணோம்… ரவி சாஸ்திரி சொன்ன செம்ம மேட்டர்!

இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளர்களில் ஒருவரான நடராஜன் ஐபில் போட்டிகளில் கலக்கி வருகிறார்.

இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு அவரின் காயங்களும் முக்கியக் காரணமாக அமைந்தன.

இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடராஜன் உலகக்கோப்பை டி 20 போட்டியில் விளையாடாதது குறித்து பேசியுள்ளார். அதில் ‘நடராஜன் ஒரு சிறந்த டெத் ஓவர் பவுலர். உலகக்கோப்பைக்கு முன்பாக அவர் காயமடைந்தார். அதனால் அவரை நாங்க அவரை மிஸ் பண்ணோம்.’ எனக் கூறியுள்ளார். இந்திய அணி உலகக்கோப்பை டி 20 போட்டியில் லீக் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.