1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (10:10 IST)

கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட்… ஃபர்ஸ்ட் லுக் & பாடல் வெளியீடு!

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது அவர் பேப்பர் ராக்கெட் என்ற நேரடி ஓடிடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜி 5 தளத்தில் இந்த படம் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் காலை மாலை என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி கவனத்தைப் பெற்றுவருகிறது.