செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:46 IST)

டெஸ்ட் அணியிலும் நடராஜன்? உமேஷ் யாதவ் காயத்தால் அடித்த லக்!

உமேஷ் யாதவ்வுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இடது முழங்காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்புக் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் அவர் இரு வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு பதிலாக தமிழக அணியைச் சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பளிகப்படலாம் என சொல்லபடுகிறது.