செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (12:07 IST)

பேட்மின்டன் வேர்ல்டு டூர் : சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து

உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.


 
2018ம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய ஒலிம்பிக் மங்கை பிவி சிந்து இறுதிச்சுற்றில் 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் தன்னை எதிர்த்து விளையாடிய உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசோமி ஓகுஹாராவை வீழ்த்தினார். 
 
இதன் மூலம் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார். முன்னதாக அவர் அரையிறுதி போட்டியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இன்டனோனுடன் மோதினார்.  21-16, 25-23 என நேர் செட்களில் வெற்றி பெற்றார் சிந்து.