செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (17:55 IST)

பஞ்சாப் அணியால் 14 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸி பவுலர்!

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட்ஸனை 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஏப்ரலில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒரு சில வீரர்களை விடுவித்துள்ள நிலையில் மற்ற அணி வீரர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சர்ட்சனை ஆச்சர்யப்படும் வகையில் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இவர் நடந்து முடிந்த பிக்பாஷ் தொடரில் 29 விக்கெட்களை வீழ்த்தி கலக்கினார் என்பதால் இந்த தொகையாம்.