ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (23:22 IST)

9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

இன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலாக ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் களமிறங்கிய 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது.
 
இதனால் பஞ்சாப் அணிக்கு 13 ஓவரில் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு தரப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் அணி 11.1 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.