செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (13:34 IST)

எடையை பராமரிப்பது அந்தந்த வீரர்களின் பொறுப்பு, மருத்துவ குழு பொறுப்பில்லை: பி.டி.உஷா!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் எடையை பராமரிப்பது அவர்களுடைய பொறுப்பு என்றும் இதற்காக மருத்துவ குழுவை குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல என்றும் பிடி உஷா தெரிவித்துள்ளார். 
 
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இதற்கு  மருத்துவ குழுவை குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பிடி உஷா கருத்து தெரிவித்துள்ளார். எடையை பராமரிப்பது அந்த வீரர்களின் பொறுப்பு  மற்றும் அவரின் பயிற்சியாளரின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்படும் மருத்துவ குழுவை குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் பிடி உஷா தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைமை மருத்துவர் மீது விமர்சனம் எழுந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பிடி உஷா இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva