வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

விஜய் ஹசாரே கோப்பையில் அடித்து வெளுக்கும் பிருத்வி ஷா!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான பிருத்வி ஷா மிகச்சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறார்.

தற்போது மாநிலங்களுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் கேரள அணிக்காக விளையாடும் இளம் வீரரான தேவதட் படிக்கல் 4 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். அதேபோல டெல்லி அணிக்காக விளையாடும் பிருத்வி ஷா வும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதுவரை அவர் 6 போட்டிகளில் விளையாடி 700 ரன்களைத் தாண்டி சேர்த்து சாதனை படைத்துள்ளார். இன்று கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் 122 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்துள்ளார். இதற்கு முன்னர் மயங்க் அகர்வாலின் சாதனையான 723 ரன்களைக் கடந்துள்ளார்.