பாராலிம்பிக்ஸில் மற்றுமொரு வெள்ளி பதக்கம்! – உயரம் தாண்டி வென்ற பிரவீன் குமார்!
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரவீன் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்தியா மொத்தம் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.