1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:25 IST)

உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல் அபார வெற்றி!

portugul
உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல் அபார வெற்றி!
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 3 போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது
 
அதில் முதல் போட்டியில் போர்ச்சுக்கல் மற்றும் உருகுவே நாடுகளுக்கு இடையே நடந்த நிலையில் போர்ச்சுகல் அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடி 2 கோல் போட்டனர்
 
உருகுவே அணி வீரர்கள் கடைசிவரை கோல் எதுவும் போடாததால் இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல்  அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் மேலும் 2 போட்டிகளில் விபரங்கள் பின்வருமாறு
 
ஈக்வடார் - செனேகல்
 
நெதர்லாந்து - கத்தார்
 
Edited by Siva