ஒவ்வொரு பந்தின் போது தந்தை என்னுடன் இருந்தார்… க்ருனாள் பாண்ட்யா ட்வீட்!

Last Updated: புதன், 24 மார்ச் 2021 (16:02 IST)

இந்திய அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்துக் கலக்கியுள்ளார் க்ருணாள் பாண்ட்யா.

நேற்றைய போட்டியில் ஆல்ரவுண்டர் க்ருணாள் பாண்டியா, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 6 ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய அவர் அதிரடியில் புகுந்து விளாசினார். இதன் மூலம் அவர் 31 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். அதில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம்.

இந்த போட்டியில் அவர் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அறிமுக வீர்ர ஒருவரின் அதிவேக அரைசதமாகும். அவரது இன்னிங்ஸ் முடிந்ததும் அவரை நேர்காணல் செய்ய தொகுப்பாளர் அழைத்தபோது எதுவும் பேச முடியாமல் அவர் உணர்ச்சிவசபட்டு அழத் தொடங்கினார். அப்போது அருகில் இருந்த அவரின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யா கட்டியணைத்து தேற்றினார். இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் க்ருணாள் பாண்ட்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஒவ்வொரு பந்தின் போதும் என்னுடன் நீங்கள் இருந்தீர்கள் அப்பா. என்னுடைய வலிமையாகவும், உறுதுணையாகவும் இருந்ததற்கு நன்றி. நாங்கள் சாதிக்கும் அனைத்தும் உங்களுடையது அப்பா’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :