ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (18:48 IST)

புல்வான் தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடித் தொடர்பு, சதித் திட்டம் ! அமைச்சர் தகவலால் அதிர்ச்சி

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மிகப்பெரிய சாதனை என்று அந்த நாட்டில் அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் பயனாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புல்வாமா தாக்குதலுக்காகப் பயன்படுத்திய வாகனம் மற்றும் வெடிபொருட்களை ஏற்பாடு செய்தது ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த முடாசிர் அகமத் கான் என்பது கண்டறியப்பட்டது. அவர் மார்ச் 11ஆம் தேதியன்று நடத்தப்பட்ட என்கவுண்டரில் முடாசிர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பயங்கரவாதி முடாசிர் உடன் இணைந்து செயலாற்றியவர் சஜ்ஜத் கான் எனவும் அவர் டெல்லியில் சால்வை விற்பனையாளராக இருந்து வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து டெல்லியில் அவர்  டெல்லி சிறப்புக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டார்.. அவரிடம் இப்போது தாக்குதல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிலுள்ள முஸ்லீம் லீக் கட்சியின் அயாஸ் சாதிக் இந்தியா மீது ஒரு குற்றம் சாட்டியுள்ளார்.

அதில் இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்காவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியா  வான்வளி தாக்குதல் நடத்துவதுவதாக எச்சரிக்கை விடுத்ததாகவும், அப்போது ஆலோசனை கூட்டத்திற்கு மெஹ்முத் குரேஷி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்ததும் பாகிஸ்தான் ராணு தளபதி பஜ்வா நடுங்கியது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மற்றொரு பாகிஸ்தான் அமைச்சர் பாவத், பிரதமர்  இம்ரானின்பெரிய சாதனை புல்வாமா தாக்குதல்…புல்வாமா தாக்குதல் நடத்தியதிலும், சதித்திட்டம் தீட்டியதிலும் பாகிஸ்தான் அரசுக்கு நேரடித் தொடபு உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பேசு பொருளாகும் என தெரிகிறது.