ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (19:04 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. 18 பாகிஸ்தான் வீரர்களின் முழு விவரங்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இருக்கும் நிலையில் சற்று முன் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது என்பதும் உலகக்கோப்பை தொடரின் தோல்வி காரணமாக பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 
 
டிசம்பர் 14 முதல் தொடங்கும்  இந்த தொடரின் பாகிஸ்தான் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஷான் மசூத் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் பாகிஸ்தானின் அணியின் முழு விவரங்கள் இதோ
 
ஷான் மசூத் (கே), பாபர் ஆசாம், ஷஹீன் அஃப்ரிடி, அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அஹ்மத், ஃபஹீம் அஸ்ரஃப், ஹசன் அலி, இமாம் உல் ஹக், குர்ரம் ஷெஹ்சாத், மிர் ஹம்சா, முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நௌமன் அலி, சைம் அயூப், ஆகா சல்மான், சர்ஃபராஸ் அஹ்மத் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல்.
 
Edited by Mahendran