ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (13:32 IST)

பெங்களூரு அணியின் படிக்கல் முதல் போட்டியிலேயே செய்த சாதனை!

padikkal
நேற்றைய ஐபிஎல் போட்டி பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் பெங்களூர் அணி ஆச்சரியமாக வெற்றி பெற்றது. அந்த அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று ஒரு கட்டத்தில் இருந்த நிலையில் திடீரென அந்த அணி வெற்றி பெற்றது பெங்களூர் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல் நேற்று தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 56 ரன்கள் எடுத்தார். அவர் நேற்றைய போட்டியில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த வீரர்களில் ஒருவராக படிக்கல் சாதனை செய்துள்ளார்
 
இந்த கடந்த 4 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த வீரர்கள் யாரும் இல்லை என்பதும் இவர்தான் முதல் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு சாம் பில்லிங்ஸ் 54 ரன்கள் எடுத்ததே ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்த வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு ரிச்சாட் லெவி, 2010 ஆம் ஆண்டு கூலிங்வுட், அதே ஆண்டில் கேதார் ஜாதவ் ஆகியோர் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது