திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : சனி, 16 நவம்பர் 2019 (18:10 IST)

’மீண்டும் ஃபாமுக்கு வந்து களமிறங்கிய தோனி’... ரசிகர்கள் உற்சாகம் ... வைரலாகும் வீடியோ

கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் கொடி கட்டிப் பறந்தவர் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டி- 20 கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை வென்று சாதித்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த, உலகப் கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து ஓய்வில் இருந்துவரும் தோனி, தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

எனவே, இந்திய - வங்கதேச அணிகள் விளையாடும் தொடர் முடிந்து  அடுத்து வரும் தொடரில் நல்ல ஃபாமுடன் தல தோனி நிச்சயம் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பாத்துள்ளனர்.